Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தெரு விளக்குகள் எரியாததை கண்டித்து…. தீப்பந்தம் விற்று நூதன போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சி, பயணம் பகுதிகளை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாலத்தில் இருக்கும் திருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து சமூகவிரோதிகளும், மது பிரியர்களும் இருக்கும் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பெண்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்களும், பொதுமக்களும் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்ற பொருட்களை விற்பனை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பாலத்தில் தீ பந்தங்களுடன் நடந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |