கமலின் விக்ரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு வானதி சீனிவாசன் ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்தது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்தது.
Feeling happy to have won you in Assembly Elections.
Watched #Vikram! Keep entertaining us Mr.@ikamalhaasan!
தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்.#விக்ரம் திரைப்படம் பார்த்தேன்.
உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். pic.twitter.com/lr7Oi0WI19
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 4, 2022
விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல், லோகேஷ் கனகராஜுக்கு காரும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு பைக்குகளையும் கமல்ஹாசன் பரிசாக வழங்கினார். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன் விக்ரம் திரைப்படத்தை பார்த்த பிறகு கமலை பாராட்டி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தேர்தலில் உங்களை வெற்றி பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன். விக்ரம் படத்தை பார்த்தேன். உங்கள் கலைப்பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.