நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் டாக்டர். இந்த படம் இந்த மாதத்தின் கடைசியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் “sobaby” என்ற பாடலின் வீடியோவை சிவகார்த்திகேயன், திலிப்குமார், அனிருத் ஆகிய 3 பேரும் இணைந்து பாடல் உருவாகும் விதத்தை வீடியோவாக ரிலீஸ் செய்து இருந்தனர்.
இதை போன்று தற்போது சுட்டி குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஸ்பூப் வீடியோவாக உருவாக்கியுள்ளனர். நிஜ காட்சியில் வருவது போலவே குழந்தைகள் மிகவும் சிறப்பாக இந்த வீடியோவில் தத்ரூபமாக நடித்துள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
😂ULTIMATE! @anirudhofficial @Nelsondilpkumar @Siva_Kartikeyan
Adhum new additions @priyankaamohan @RajheshVaidhya 😂vera level! @3brownboys on instagram did a spoof of #SoBaby lyric video.
— Anirudh FP (@Anirudh_FP) March 5, 2021