Categories
அரசியல் மாநில செய்திகள்

தெறிக்க விடும் அதிமுக….. ”காழ்ப்புணர்ச்சி வழக்கு”…. கதறும் செந்தில் பாலாஜி …!!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்பட்ட ஒன்று தான் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்கு ஆஜரான போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான அஇஅதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அவரது துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சென்னையில் உள்ள அவரது மந்தைவெளி வீடு சீல் வைக்கப்பட்டது.

இவ்வழக்கில் முன் பிணைக் கோரிய செந்தில் பாலாஜி கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் பிணை வழங்கி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை உயர் அலுவலர் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், தேவைப்படும்போது விசாரணை அலுவலர் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையின் பண மோசடி வழக்கு விசாரணை அலுவலர் ராமசந்திர மூர்த்தி முன்பாக ஆஜராகி தன் தரப்பு விளக்கங்களை அவர் அளித்தார்.

இன்றைய விசாரணை முடித்து வெளியே வந்தபோது ஊடகத்தினரை சந்தித்த அவர், ‘ அரவங்குறிச்சி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் தேர்தல் முறைகேடுகளைத் தாண்டி, முதலமைச்சர், துணை முதலமைச்சர் , அமைச்சர்கள் பரப்புரையைத் தாண்டி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நான் வென்றதை ஏற்க முடியாமல் என் மீது, காழ்ப்புணர்ச்சியால் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டபோது அதில் என் பெயரும், என் தம்பியின் பெயரும் இல்லை. ஆனால் அதன் பிறகு அரசியல் காரணங்களுக்காக எங்கள் பெயர்கள் இதில் இணைக்கப்பட்டன. இதனால் நான் ஒருபோதும் சோர்வடையப்போவதில்லை. இந்த புனையப்பட்ட பொய்யான வழக்கை நான் சட்டப்படி எதிர்க்கொள்வேன்’ என அவர் கூறினார்.

Categories

Tech |