தெலுங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்ட பந்தயம் விளையாடினார். இதற்கு முன்னதாக நடன கலைஞர்களுடன் பதுகம்மா நடனமாடி ராகுல் காந்தி உற்சாகப்படுத்தினார். ராகுல் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள் மற்றும் 7 பார்லிமென்ட் தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி மராட்டியம் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு முன்னதாக நவம்பர் நான்காம் தேதி யாத்திரைக்கு ஓய்வுவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்டப்பந்தயம் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Out for a marathon, but let's sprint! 🏃♂️#BharatJodoYatra pic.twitter.com/d7GIbYQXXA
— Bharat Jodo Nyay Yatra (@bharatjodo) October 30, 2022