டேவிட் வார்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி டிக் டாக் வீடியோக்கள் செய்து வெளியிடுவார். அதில் பெரும்பாலானவை இந்திய படங்களின் காட்சிகள், பாடல்களாக தான் இருக்கும். மேலும் இவர் ரஜினி, பிரபாஸ், ஷாருக்கான் போன்ற பல நடிகர்களின் காட்சிகளை ரிஃபேஸ் ஆப் மூலம் மாற்றி வெளியிட்டு வருகிறார்.
😂😂😂 Thoughts?? #funny #india #acting https://t.co/IKdDGcaXvN
— David Warner (@davidwarner31) July 29, 2021
இவர் வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகிறது. இந்நிலையில் டேவிட் வார்னர் தெறி படத்தில் வரும் செல்லா குட்டி பாடலில் விஜய்யின் முகத்தை தனது முகமாக மாற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.