சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களான தபால்தலை கண்காட்சியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிஜி.மல்யா நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த கண்காட்சியில் முத்திரைகள், முதல் நாள் அட்டைகள், சிறப்பு கவர்கள், அஞ்சல் பட அட்டைகள் மற்றும் இதர அஞ்சல் எழுத்து பொருட்கள் மூலம் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி மற்றும் சுதந்திர போராட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் காட்சிகள் ஆகியவை இடம்பெற்று உள்ளது.
அதன்படி 194 தபால் தலைகள், 93 சிறிய அளவு தாள்கள், 85 முதல் நாள் அட்டைகள் மற்றும் 113 சிறப்பு அட்டைகள் என்று மொத்தம் 505 கண்காட்சி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தெற்கு ரயில்வே தலைமையகத்தின் நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டதன் நினைவாக சமீபத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டையும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.