Categories
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு …!!

தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கிறது.

தெலுங்கானாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. ஹைட்ரபாத் உட்பட பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகினர். மழை காரணமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய குழு இன்று தெலுங்கானா செல்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தலைமையிலான இந்தக் குழு இன்றும் நாளையும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |