தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக பொறுப்பேற்றார். அன்று முதல் தற்போது வரை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணை செயலாளராகவும் இரண்டு பதவிகளை வகித்து வந்தார்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டு கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் கூடுதல் பொறுப்பாக இருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிக்கு கர்நாடக மாநில பாஜக துணைத் தலைவர் நிர்மல்குமார் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட புதிதில் மாநில அரசுடன் இறுக்கமாக இருந்த தமிழிசை பின் அந்த உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது, இதனால் ஆளுநர் உரை, யுகாதி நிகழ்ச்சி புறக்கணிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபற்றி பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்தித்து தமிழிசை புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.