தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். தேவையில்லாமல் இரவு மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.