Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கானாவில்… “கொட்டித்தீர்த்த கனமழை” கோடிகளை வாரி வழங்கிய பிரபலங்கள் ….!!

தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக நிவாரண நிதி வழங்கி வரும் பிரபல நடிகர்கள். 

தெலுங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக  உடனடியாக  ரூபாய் 1.350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  மழை வெள்ளதாழ்  ஏற்பட்ட விபத்துக்களால்  தெலுங்கானாவில்  மட்டும்  இதுவரை  70  பேர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு சினிமா நடிகர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவுக்கு நடிகர் சிரஞ்சீவி 1, கோடியும், மகேஷ் பாபு 1, கோடியும் , ஜூனியர் என்டிஆர் ரூபாய் 50 லட்சமும் , விஜய்தேவரகொண்டா ரூபாய் 10 லட்சம் என  நிவாரண நிதி உதவியாக வழங்கியிருக்கிறார்கள். மேலும் பலர் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |