தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனை உணவகம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதனிடையே வனஸ்தலிபுரம் பகுதியில் கால்வாய்கள் நிரம்பி வழிந்ததால் இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.