Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா நீர்மின் நிலையம்… திடீர் தீ விபத்து… 9 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீ சைலம் அணையை ஒட்டி இருக்கின்ற நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வேகமாக நீர் மின்நிலையத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் நிலையத்தை முழுவதுமாக தீ சூழ்ந்ததால் சில ஊழியர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீயில் சிக்கிய 17 பேரில் 8 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9 பேர் மின் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் அந்த ஒன்பது பேரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ” ஸ்ரீசைலம் சம்பவம் மிகவும் துரதிஷ்டமானதாகும். என் எண்ணமெல்லாம் துயரம் அடைந்த குடும்பங்களுடன் மட்டுமே உள்ளன. காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், ” தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ சைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். என் எண்ணமெல்லாம் துயரம் அடைந்த குடும்பங்களுடன் மட்டுமே இருக்கின்றன” என்று தனது இரங்கல் செய்தியை கூறியுள்ளார்.

Categories

Tech |