தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் மந்திரியான நைனி நரசிம்ம ரெட்டி உடல்நலக் குறைவால் காலமானார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிர கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியுமான நரசிம்ம ரெட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவருக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.
அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நரசிம்ம ரெட்டி தனது 86வது வயதில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.