தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழில் “வாரிசு”, தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தெலுங்கு டைரக்டர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அண்மையில் இப்படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வாரிசு படத்திற்கான புரோமோஷன் பணிகள் தமிழகத்தில் துவங்கப்பட்டு இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அதே நேரம் தெலுங்கிலும் இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் ஆரம்பமாகி சூடுபிடித்து வருகிறது. அந்த வகையில் வாராசுடு என்று தெலுங்கில் ஒட்டப்பட்டுள்ள பேனர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.