தமிழ் திரையுலக இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். முன்பே சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரித்தனர். ஆனால் அப்படம் சரியாகப் போகவில்லை. இருப்பினும் தமிழிலும் தடம்பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர்.
விஜய் நடிக்கும் “வாரிசு”, தனுஷ் நடிக்கும் “வாத்தி” போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தான். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உருவாகும் “ஆர்சி 15”, வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் “கஸ்டடி” ஆகிய படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்ற வாரம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகிய “லவ் டுடே” படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வெறும் 3 நாட்களில் 7 கோடி வரை வசூலித்து படம் லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் பிரதீப்பை இயக்குனராக வைத்து தமிழ், தெலுங்கில் படங்களை தயாரிக்க சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம்.