நடிகர் சமுத்திரகனிக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சமுத்திரகனி விநோதய சித்தம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அதேபோல் ஜோதிகா, சசிகுமாருடன் இணைந்து சமுத்திரகனி நடித்துள்ள உடன்பிறப்பே படமும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. மேலும் சமுத்திரகனி தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே அல்லு அர்ஜுனின் அலவைகுண்ட புரம்லோ, ரவி தேஜாவின் கிராக் போன்ற படங்களில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இதனால் அவர் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் சமுத்திரக்கனிக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதன்படி தற்போது தெலுங்கில் ஆகாஷ்வாணி, மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் உள்பட பல தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.