தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படத்தில் நடிக்கவுள்ள நடிகர் ராணாவை வரவேற்று படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்தப் படம் இரண்டு அதிகாரிகளுக்கு இடையில் ஏற்படும் மோதலை எதார்த்தமாக எடுத்துக் காட்டியிருந்தது . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் வாங்கியுள்ளார் . இதில் நடிகர் சசிகுமார் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பவர் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது .
Another Journey begins!! What joy this is, been able work with so many stars across industries!! And now joining the coolest back home Our very own Power ⭐️ @PawanKalyan !! Can’t wait thank you @SitharaEnts!! https://t.co/rMgae4Bltj
— Rana Daggubati (@RanaDaggubati) December 21, 2020
மேலும் தெலுங்கு ரீமேக்கிற்க்கான உரிமையை தயாரிப்பாளர் சூரியதேவர நாகவம்சி வாங்கியுள்ளார் . இந்த படத்தில் பிஜூமோனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் பிரித்திவிராஜ் நடித்த கோஷி கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர் . இந்நிலையில் ராணா டகுபதியை வரவேற்று படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.