Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்… முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ்… வெளியான மாஸ் தகவல்…!!!

அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேதாளம். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் .

మహానటికి మరో లక్కీ ఛాన్స్..!

தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த, சாணிக் காயிதம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

 

Categories

Tech |