Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு சினிமா” சில குடும்பங்களின் ஆதிக்கம்…. ஹீரோயின்களை அதுக்கு மட்டும் தான் யூஸ் பண்றாங்க…. பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு….!!!!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை அமலாபால் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு மைனா, தெய்வ திருமகள், பசங்க 2, தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை என்ற திரைப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அமலாபால் தற்போது காடவர் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்து கொண்ட நிலையில், முன்னாள் காதலருடன் 2-வது திருமணம் குறித்த புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்தார். அதில் தெலுங்கு சினிமாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

அதாவது தான் தெலுங்கு சினிமாவில் நடித்த போதுதான் தெலுங்கு சினிமா சில குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது எனக்கு தெரிய வந்தது. நான் தெலுங்கில் நடித்த அனைத்து படங்களும் வித்தியாசமானது. தெலுங்கு சினிமாவில் ஹீரோயின்களை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்து கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அமலாபாலின் திடீர் குற்றசாட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |