பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பரம வீர் சக்ரா, லெஜெண்ட், ஸ்ரீராமராஜ்யம், டிக்டேட்டர் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நந்தமுரி பாலகிருஷ்ணா காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார்.
#NBK107 – Hunt Starts Soon 🦁#HappyBirthdayNBK 🔥@megopichand@MusicThamanhttps://t.co/qACF9chVrV
— Mythri Movie Makers (@MythriOfficial) June 10, 2021
இந்நிலையில் இன்று நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வருவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.