நடிகர் அஜித் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் முதன்முதலில் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.