Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு…. திருப்பதி கோவிலில்…7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம்…!!

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் கோவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 300 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் இந்த அலங்காரத்தை கண்டு களித்தனர்.

Categories

Tech |