Categories
மாநில செய்திகள்

தெளிவின்றி இருக்கும் பள்ளி திறப்பு வழிகாட்டுதல்கள்…. மக்கள் நீதி மையம் கட்சி கோரிக்கை…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் 1- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் (நாளை) பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட சூழலில் வழிகாட்டுதல்கள் தெளிவின்றி இருக்கிறது. இது நாளை ஏற்படும் விளைவுகளுக்கு மற்றவர்மேல் பழி போடுவதற்கே வாய்ப்பளிக்கும். ஆகவே குழப்பத்தை தீர்க்க பள்ளிக்கல்வித்துறை தெளிவான வழிகாட்டுதல்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |