Categories
அரசியல்

தேங்காய் விவசாயம்…. கலக்கும் பட்டதாரி பெண்…. இந்த கதையை படிச்சு பாருங்க….!!!!

இன்று வேலையில்லாமல் திண்டாடும் பலரும் சுய தொழிலில் நல்ல லாபம் ஈட்டலாம் என்ற நோக்கத்தோடு விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற ஊரை சேர்ந்த பட்டதாரி பெண் மீனா விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தற்போது தென்னங்கன்று உற்பத்தியாளராக உள்ளார்.

தென்னை விவசாயம் :-

தென்னை விவசாயம் ஈத்தாமொழி பகுதியில் முக்கிய விவசாயமாக திகழ்கிறது. இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் வளம் மிக்கதாகவும், அதிக அடர்த்தியோடும் திகழ்வதால் இங்குள்ள தென்னை கன்றுகளையும், தேங்காயையும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளை சேர்ந்த விவசாயிகளும் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

 

அருமையான தேங்காய்கள் :-

இங்கு தென்னைகளில் உள்ள பல்வேறு பிரிவுகளான மலேசியன் பச்சை, சிகப்பு, நக்குவாரி, ஜாவா, நாடு, அம்பாடி உள்ளிட்ட 12 வகையான தேங்காய் கன்றுகளும் பாவுதல் செய்யப்படுகிறது. அதேபோல் மண்வளமே இங்கு பாவுதல் செய்யப்படும் தென்னங்கன்றுகள் மற்றும் விளைவிக்கப்படும் தேங்காய்களுக்கு சிறந்த உரம். இதனால் தான் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு விளையும் தென்னங்கன்றுகளையும், தேங்காய்களையும் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.

பக்குவம் – பராமரிப்பு :-

தென்னை மரங்களில் இருந்து வெட்டப்படும் தேங்காய் கொலைகளில் உள்ள தேங்காய்களை தரம் பிரித்து பின்னர் அதனை பக்குவப்படுத்தி தேங்காய் மட்டையிலிருந்து பெறப்படும் நார் மூலமாக அதனை மண்ணோடு மண்ணாக வைத்து பாவுதல் செய்துவிடுகின்றனர். இதையடுத்து தண்ணீர் ஒரு வாரத்தில் இரண்டு முறை விடுகின்றனர். அதில் மற்ற ரக தேங்காய்கள் மூன்று முதல் ஐந்து மாத காலங்களிலும், சிகப்பு என்றால் ஒன்று முதல் இரண்டு மாத காலங்களிலும் முளைவிட ஆரம்பிக்கின்றன. பின்னர் முளை விட்ட தேங்காய் கன்றுகள் விற்பனைக்காக ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப்படுகிறது.

தரமான தேங்காய்கள் :-

தென்னங்கன்றுகளை வாங்கி வாரம் ஒருமுறை அதற்கு தோப்புகளில் வைத்து தண்ணீர் பாய்ச்சினால் மூன்று முதல் ஐந்து வருடங்களில் தரமிக்க தேங்காய் கிடைக்கிறது. அதேபோல் இங்கு விளையும் தேங்காய், விற்பனையில் அதிக லாபத்தை ஈட்டிக் கொடுப்பதால் வெளிநாடுகளிலும் கன்னியாகுமரி மாவட்ட தென்னங்கன்றுகளுக்கு நல்ல மவுசு உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தொழில் மூலம் பலருக்கும் மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. விவசாயத்தை வரும் தலைமுறையினர் பேணிக்காக்க வேண்டும் என்பதே தற்போதைய விவசாயிகளின் விருப்பமாக உள்ளது என்று மீனா கூறியுள்ளார்.

Categories

Tech |