கழிவு நீர் தேங்கிய பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ரயில் நிலையம் அருகே இருக்கும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் காந்திபுரத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து கழிவுநீர் தேங்கி நின்ற பள்ளத்தில் சிக்கியது. நீண்டநேரமாக முயற்சி செய்தும் ஓட்டுநரால் பேருந்தை வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பள்ளத்திலிருந்து பேருந்தை மீட்டனர். அதன் பிறகு பள்ளமாக இருந்த தார் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.