Categories
மாவட்ட செய்திகள்

தேசத் தலைவர்களின் படங்களை தென்னங்கீற்றில் வரைந்த இளைஞர்கள்… புதிய முயற்சிக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!

விராலிமலையில் இளைஞர்கள் இருவர் தேசத் தலைவர்களின் படங்களை தென்னங்கீற்றில் வரைந்து பாராட்டுகளை பெற்று உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் இருக்கும் ரத்னா கார்டன் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் இருபத்தி ஒரு வயதுடைய மகன் நேதாஜி வேதியல் பாடத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றவர். அதே பகுதியில் வாழும் கமலக்கண்ணன் என்பவருடைய இருபத்தியோரு வயது மகன் குகன். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே தோழர்களாக இருந்து வருகின்றனர்.

இருவருக்கும் ஓவியம் வரைவதில் மிகவும் ஈடுபாடு இருந்து வந்த நிலையில் மற்றவர்களைப்போல் ஓவியம் வரையாமல் தாங்கள் வரையும் ஓவியம் தனித்தன்மையானதாக இருக்க வேண்டும் என புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு இருக்கின்றனர். அதன் விளைவாக தென்னை மரத்திலிருந்து தென்னங்கீற்றை எடுத்துவந்து தேச தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் உள்ளிட்டோரின் படங்களை தத்துரூபமாக வரைந்திருப்பதால் இவர்களின் முயற்சியை பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றது.

Categories

Tech |