Categories
தேசிய செய்திகள்

தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்ய தடை…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் 124 ஏ சட்டப் பிரிவை பயன்படுத்தி சில அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தபடுவதாகவும்,இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், தற்போது நிலுவையில் இருக்கக்கூடிய தேசத்துரோக வழக்குகளையும் இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை விரிவான தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில் இதற்கு கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேசத்துரோக சட்டப்பிரிவு விதிகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

தேசத்துரோக சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்யும் வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக் கூடாது. அதனை விசாரணை செய்யவும் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகள்,மேல் முறையீடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மறுவாழ்வு பணிகள் முடியும் வரை இந்த சட்ட விதியை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதுவரை தேசத்துரோக வழக்குகள் எதுவும் பதிவு செய்யக் கூடாது. ஏற்கனவே தேசத் துரோக வழக்கில் சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம். மேலும் மத்திய மாநில அரசுகள் இப்போதைக்கு தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்ய மாட்டார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |