மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் விடுதலைக்கு பெரிதும் போராடி, இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி வெற்றி கண்ட நம் தேசப்பிதா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனால் அவருக்கு நாடு முழுவதிலுமுள்ள அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.அதன்படி டெல்லியில் இருக்கின்ற அவரின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
அதற்கு முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. நேசத்திற்குரிய மகாத்மா காந்திக்கு நாம் அனைவரும் தலை வணங்குவோம். காந்தியின் கொள்கைகள் செழுமையான மற்றும் இரக்க குணம் உள்ள கொள்கைகள் இந்தியாவை உருவாக்குவதற்கு நமக்கு வழிகாட்டுகின்றன” என்று அவர் பதிவிட்டுள்ளார்.