தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், “உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓயவில்லா களப்பணியும் தேசத்தை திரும்பி பார்க்க வைக்கிறது. உங்கள் வழியில் தமிழகம் தலை நிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்” என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.