ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி வங்கி மேலாளர் காவலர் உட்பட நான்கு அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை புலனாய்வு மற்றும் நுண்ணறிவு பிரிவினரும் தீவிரமாக கண்காணித்த பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நுண்ணறிவு பிரிவின் தகவல்கள் அவர்களின் முக்கிய குறிப்புகள் போன்றவற்றை ஆராய்ந்த குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகும் என ஜம்மு காஷ்மீர் அரசு செய்த தொடர்பாளர் கூறியுள்ளார்.