தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை பக்தர்கள் ஆர்வத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர்.
இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நேற்று பிரம்மாண்டமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறங்களால் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு செட்டிநகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு தேசிய கொடியால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதன் காரணமாக அம்மனை ஆர்வத்தோடு பொதுமக்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.