Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடியின் மூவர்ணத்தை…. இயற்கையே வெளிப்படுத்திய கடற்கரை புகைப்படம்…. மத்திய அரசு வெளியீடு….!!!!

நம்முடைய நாடு அடுத்த மாதம் 75வது விடுதலை பெருவிழாவை கொண்டாட உள்ளது. இந்நிலையில் இயற்கையே இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை வெளிப்படுத்திய அபூர்வ புகைப்படம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ள அந்த அபூர்வ புகைப்படத்தில் சூரிய உதயம் செந்நிறத்திலும், வெள்ளை நிறத்தில் கடல் அலைகளின் நுரை பொங்க பச்சை நிறத்தில் கடல் பாசிகள் காணப்படுகின்றன.

நம் தேசியக் கொடியில் உள்ள மூவரணத்தை இந்த இயற்கை காட்சிகள் மிக அழகாக பிரதிபலிக்கின்றன. இவ்வாறான அந்த அற்புத புகைப்படத்தை மத்திய அரசு தனது twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |