தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.
ஷீரடியில் நவம்பர் 4, 5ம் தேதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸின் கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்ள இருக்கிறார். மருத்துவமனைக்கு வெளியில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகாராஷ்டிரத்திற்குள் நவம்பர் 8ல் நுழையும் காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமைக்கான நடை பயணத்திலும் சரத்வார் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.