தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித்.
இந்தப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் அஜித். தேசிய அளவிலான போட்டியிலும் அஜித் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.