தங்க பத்திர முதலீட்டில் இந்த அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அரசின் தங்க பத்திரம் முதலீடு திட்டம் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கத்தினுடைய மதிப்பு 4,791 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 13,219 கிராம் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மொத்த முதலீட்டின் மதிப்பு 6 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 229 ரூபாய் ஆகும். இந்நிலையில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் நாமக்கல் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கூறியுள்ளார். மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய தங்க முதலீட்டில் பொதுமக்கள் பயனடையும்படி கூறியுள்ளார்.