Categories
சினிமா

தேசிய அளவில் மிரட்டும் “BEAST” படம்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சென்ற ஏப்ரல் 13ஆம் தேதி திரை அரங்குகளில் “பீஸ்ட்” திரைப்படம் வெளியாகியது. அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின்  தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றி இருந்தது.

இதற்கிடையே படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். இந்த நிலையில் படம் வெளியாகி ஒருமாதம் கடந்து விட்ட சூழ்நிலையில், சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் “பீஸ்ட்” திரைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு, இந்தி என 5 மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில், தேசிய அளவில் அதிகம் பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை “பீஸ்ட்” பிடித்துள்ளது. அதாவது படத்தின் இந்தி டப்பிங் முதலிடத்தையும், தமிழ் இரண்டாம் இடத்தையும், தெலுங்கு மூன்றாம் இடத்தையும் பிடித்து இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

Categories

Tech |