Categories
பல்சுவை

“தேசிய இளைஞர் தினம் ” நிறைவேறும் விவேகானந்தரின் விருப்பம்….!!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான( ஜனவரி 12) அன்று தேசிய இளைஞர் தினமாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்திய இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பம் , விஞ்ஞானம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு போட்டிபோடும் அளவுக்கு இணையாக விளங்குகின்றனர். இருப்பினும் சில எதிர்மறையான எண்ணங்களைக் கொண்ட இளைஞர்களும் நம் இந்திய நாட்டில் தான் உள்ளனர். இவர்கள் மது, புகையிலை மற்றும் போதை போன்ற அனைத்து தீய பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளனர். இதனால் இவர்களை சார்ந்திருக்கும் சமூகத்தைப் பின்னோக்கி செல்கிறது.

விவேகானந்தரின் விருப்பம்:  ‘இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்பு மிக்கது, அவர்களது வயது எத்தகைய சவால்களையும் தூக்கி எறிந்து சாதிக்கக் கூடியது’. மேலும் ‘ தூய்மை,பொறுமை,விடாமுயற்சி’ இந்த மூன்றும்தான் இளைஞர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘இரும்பு போன்ற தசை’, ‘எக்கு போன்ற  நரம்பு’ இளைஞர்களுக்கு வேண்டும் என்று விவேகானந்தர் விரும்பியுள்ளார். ‘ஒரு இளைஞன் தேசப்பற்று,வீரம், ஒழுக்கம் மனிதநேயப் பண்புகள் , தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவை கொண்டு இருந்தால் அந்த நாடும் முன்னேறும்’ என்று விவேகானந்தர் கூறியுள்ளார். மேலும் ‘நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்… இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்’ என்றார் இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாக விளங்குகிறது.

Categories

Tech |