இந்திய குத்துச்சண்டை சம்மேளம் மற்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆதரவுடன் 5 வது தேசிய குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற 6 தேதி முதல் 14ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் ஆண்களுக்கு 13 இடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடை பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டிக்கான தமிழக அணிகளை தமிழக குத்துச்சண்டை சங்க செயலாளர் எம்.எஸ். நாகராஜன் இன்று அறிவித்துள்ளார்.
இதில் ஆண்கள் யுவேஸ்வரன் (மினிமம் வெயிட் 46-48 உடல் எடை) நவீன் குமார் (பாந்தம் வெயிட்), திருநாவுக் கரசு (லைட் வெயிட்), சுபாஷ் வசந்த் (லைட் வெல்டர்), டில்லி பாபு (வெல்டர் வெயிட்), கபிலன் (லைட் மிடில்), பூபாலன் (மிடில் வெயிட்), லோஷன் (கிரைசர் வெயிட்-அனை வரும் சென்னை), விஷ்வா ஜித் (பிளை வெயிட்-கோவை), காவியன் (பெதர் வெயிட்), தியாகராஜன் (லைட் ஹெவி வெயிட்) சாம்பால்ராஜ் (சூப்பர் ஹெவி வெயிட்-மூவரும் திருவள்ளூர்), ஸ்ரீவெங்கடேஷ் (ஹெவி வெயிட்-கடலூர்)ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து பெண்கள் லோஷினி (மினிமம் வெயிட்), எச். மதுமிதா (பாந்தம் வெயிட்), ஸ்ரீநிதி (லைட் மிடில்-சென்னை), பூவிதா (பிளை வெயிட்) ஜீவா (பெதர் வெயிட்) மாலதி (லைட் வெல்டர்-புதுக் கோட்டை), சினேகா (லைட் வெயிட்-திருச்சி), அனுசுயா (வெல்டர் வெயிட்-காஞ்சீ புரம்), எம்.மதுமிதா (மிடில் வெயிட்), ஜெயஸ்ரீ (லைட் ஹெவி), அபினயா சரஸ்வதி (கிரைசர் வெயிட்-திருவள்ளூர்), பிரிஸ்கிலா (ஹெவி வெயிட்-கன்னியா குமரி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.