சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது குறித்து கூறியுள்ளதாவது, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் இருக்கும் ஐந்து வயது உட்பட்ட 73 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு கூடுதலாக ஊட்டச்சத்து உருண்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இம்மாதம் முழுவதும் மாவட்டத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளடவைகளில் ஊட்டச்சத்துக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என கூறியுள்ளார்.