தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு மக்கள் மறியலில் ஈடுபட்டார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் பாளையங்கோட்டை ஊராட்சியில் வீட்டு வரி செலுத்தினால் தான் கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்ததால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டையை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பாக நேற்று காலை காத்திருந்தார்கள்.
ஆனால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்து அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பஸ்சை மறித்து மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து பஸ்ஸை விடுவித்தனர். பின் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பிறகு செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்கள். அதன்பிறகு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.