Categories
அரசியல்

“தேசிய ஒற்றுமை தினம்” எப்படி கொண்டாட வேண்டும்….? சிறப்பு நிகழ்சிகள் என்னென்ன….!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31-ஆம் நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். சுமார் 540 சமஸ்தானங்களில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவில் வசிக்கும் மக்கள் இனம், மொழி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் குறிக்கும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்பட முக்கிய இடங்களில் தேசிய ஒற்றுமை தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேசியஒற்றுமையின் அவசியம், முக்கியத்துவம் குறித்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேசிய ஒற்றுமை தினம் தொடர்பாக சில தலைப்புகளை கொடுத்து அதில் மாணவர்களுக்கு போட்டிகளை வைப்பர். இதில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி என பல்வேறு போட்டிகள் நடக்கும். அன்றைய தினத்தில் மாணவர்கள் தேசிய ஒற்றுமையை குறிக்கும் வகையில் கிராப்ட் ஒர்க் செய்து அசத்துவர். முக்கிய அம்சமாக மாணவர்கள் மதம், சாதி, மொழி, இனம் வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தும் வகையில் முக்கிய தலைவர்கள் மற்றும் மதங்களை குறிக்கும் வேடங்கள் அணிந்து வருவர். இதனையடுத்து தேசிய ஒருமைப்பாடு குறித்து உறுதிமொழி எடுத்ததை தொடர்ந்து பல்வேறு நிகழ்சிகள் நடைபெறும். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Categories

Tech |