தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஒற்றுமையினால் உறுதி மொழியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி படிக்க அனைத்து அரசு அலுவலர்களும் திரும்பப் படித்து உறுதி மொழியை ஏற்றுக் கொண்டுள்ளனர். முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேசிய ஒற்றுமை மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, உதவி கலெக்டர் சதீஷ்குமார், உதவி ஆணையர் குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், நில அளவை உதவி இயக்குனர் சேகரன், கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், வெங்கடேசன், தாசில்தார் சம்பத் துணை தாசில்தார், சண்முகசுந்தரம் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த மாரத்தான் போட்டியில் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்துள்ளது.