டிஜிலாக்கர் சேவை மூலம் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு துவங்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டில் அட்ரஸ் அப்டேட் செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது அனுமதி வழங்கியுள்ளது. இதில் டிஜிலாக்கர் என்பது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் ஆவணக் காப்பகம் ஆகும். ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்(NPS) அக்கவுண்ட்டை திறப்பது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம்.
# ப்ரோடீன் சிஆர்ஏ தளத்துக்கு சென்று NPS ரெஜிஸ்ட்ரேசன் பக்கத்திற்கு போக வேண்டும். அங்கு டிஜிலாக்கர் ஆவணங்களை பயன்படுத்தி ரெஜிஸ்ட்ரேசன் செய்துகொள்வதற்கான ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் அங்கு வழங்கப்படும் தேர்வுகளில் ஓட்டுநர் உரிமம் என்பதனை தேர்வுசெய்ய வேண்டும்.
# அதன்பின் தாமாகவே டிஜிலாக்கர் இணையதளத்துக்கு செல்லும். அங்கு உங்களது அக்கவுண்டில் லாகின் செய்து, ஆவணங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை கொடுக்கவேண்டும்.
# டிஜிலாக்கர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்திக்கொள்ள NPS கட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கவும். பின் ஓட்டுநர் உரிமத்திலுள்ள உங்களின் போட்டோ மற்றும் இதரதகவல்கள் NPS அக்கவுண்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
# அதனை தொடர்ந்து பான்கார்டு, வங்கி அக்கவுண்ட் புக், வாரிசு நியமனதாரர் ஆகிய விபரங்கள் கோரப்படும். அவற்றையும் உள்ளீடு செய்யவேண்டும்.
# மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை கடைப்பிடித்து NPS அக்கவுண்ட் திறந்துக்கொள்ளலாம்.
அட்ரஸ் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?..
# ப்ரோடீன் சிஆர்ஏ தளத்தில் உங்களது விபரங்களை குறிப்பிட்டு NPS அக்கவுண்ட் உள்ளே லாகின் செய்ய வேண்டும்.
# தனிவிபரங்களை அப்டேட் செய்வதற்குரிய மெனுவை தேர்வு செய்யவேண்டும்.
# அட்ரஸ் அப்டேட் என்பதனை தேர்வு செய்து, அவற்றில் டிஜிலாக்கர் ஓட்டுநர் உரிமம் வாயிலாக அப்டேட் செய்வதற்கான வாய்ப்பை தேர்வுசெய்யவும்.
# டிஜிலாக்கர் தளத்துக்கு ரீ டேரக்ட் செய்யப்படும். அங்கு லாகின் விபரங்களை குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கவும்.
# டிஜிலாக்கரிலுள்ள ஆவணங்களை ஆக்சஸ் செய்ய NPS கட்டமைப்பிற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.
# தற்போது உங்களது ஓட்டுநர் உரிமத்தில் உள்ளபடி NPS அக்கவுண்ட் அப்டேட் ஆகி இருக்கும்.