Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தேசிய கட்சிகளால் பயனில்லை”டி.டி.வி.தினகரன் கருத்து…!!

தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும்  இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற  உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும்  பெரம்பூர்  சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில்  திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் மற்றும் ஓட்டேரி ஆகிய பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

 

வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில்  டி டி வி  தினகரன் பேசுகையில்  மோடிக்கு  எடுபிடியாக இருக்கிற எடப்பாடி பழனிசாமியும் இந்த தேர்தலில் அவருடனே கூட்டணி வைத்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறது மத்திய அரசு. தமிழக நலன்களை மறந்து சுயநலத்திற்காக கூட்டணி வைத்துள்ள எடப்பாடி  ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தொடர்ந்து பேசிய அவர் காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைதுள்ளாது . ஆனால் தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. மாநில கட்சியால் மட்டுமே மக்களின் தேவைகளை போராடி பெற முடியும். இந்த தேர்தலிலும் நமது தேவைகளை போராடி பெற்றிட அ.ம.மு.க. பரிசு பெட்டகத்திற்கு  உங்கள் வாக்கினை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் ஆசியுடன் 39 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று அவர் பேசினார்.

Categories

Tech |