சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
மேலும் 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்தவர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.scholarship.gov.in என்பதில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு செப்டம்பர் 30ம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையில் உதவி தொகைக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 0422-2300404 மற்றும் இமெயில் முகவரி [email protected] மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.