இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்னு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதியும் மற்ற அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரரின் ஆதார் எண்,சேமிப்பு வங்கி கணக்குடன் இணைந்து இருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளது.