Categories
உலக செய்திகள்

தேசிய கீதத்தில் ஒரு வார்த்தையை…. மாற்றிய ஆஸ்திரேலியாவிற்கு… கிடைத்துள்ள விமர்சனம்…!!

ஆஸ்திரேலியா தன் தேசியகீதத்தில் ஒரு வார்த்தையை மாற்றியுள்ளதற்கு மக்கள் கலவையான வரவேற்பை கொடுத்துள்ளனர்.  

ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன் புத்தாண்டு தினத்தையொட்டி “Advance Australia fair” தேசிய கீதத்தின் இரண்டாம் வரியான “For we are young and free” என்பதை “For we are one and free” என்று மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாற்றமானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இதுகுறித்து கூறிய பிரதமர், “ஆஸ்திரேலியா உலகில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார நாடு” என்றும் இந்த மாபெரும் ஒற்றுமை நமது தேசிய கீதத்தில் முழுமையாக பிரதிபலிக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டிய காலம் இது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தேசிய கீதத்தின் வார்த்தை மாற்றத்திற்கு அந்நாட்டில் கலவையான வகையில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மாற்றம் குறித்து சுதேச ஆஸ்திரேலியர்களின் அமைச்சர் கென் வியாட் கூறுகையில், இந்த பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெயிட் தீவிற்குரிய கலாச்சாரங்கள் சுமார் 6,000 வருடங்கள் பழமை வாய்ந்தவை என்பதை ஒத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், ” இந்த மாற்றம் குறித்து தன்னிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு நான் ஆதரவு அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக சட்ட பேராசிரியரான டேவிஸ் என்பவர் இந்த மாற்றத்தை பழங்குடியின மக்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். மேலும் தன் இணையதளபக்கத்தில், “இது 2020 ஐ முடித்து 2021ஐ  துவங்குவதற்காக ஏமாற்றத்தை அளிக்கும் வழியாகும்” மேலும் எ”ல்லாம் எங்களைப்பற்றி தான் இருக்கிறது ஆனால் அதில் நாங்கள் இருப்பதில்லை” என்று ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |