பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த கல்வி அமைச்சர் தேசிய கீதத்தை தவறுதலாக பாடிய வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் புதிய கல்வி அமைச்சராக பாஜகவை சேர்ந்த மேவலால் சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தேசிய கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் சரியாக தெரியாமல் திணறி தவறுதலாக பாடியுள்ளார். அந்த வீடியோ எதிர்க்கட்சியான ஆர் ஜே ஐடி தனது டுவிட்டரில் பதிவிட்டு விமர்சித்துள்ளது.
அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு அமைச்சர் தேசியகீதம் தெரியாமல் தவறுதலாக பாடியது பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.