காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த நடைப் பயணமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக சென்ற 7ம் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. மராட்டிய மாநிலத்தில் அவர் 10வது நாளாக நடைப் பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா எனும் இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் துவங்கியது.
அப்போது அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசினார். அதன்பின் ராகுல் காந்தி தன் உரையை முடித்ததும், தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது. அதனை தொடர்ந்து அனைவரும் அமைதியாக நின்றதும், சில நொடிகள் இசை ஒலித்தது. இதனிடையில் தேசிய கீதத்துக்கு பதில், வேறொரு பாடல் ஒலிபரப்பாகியது.
Papu ka comedy circus 😂 pic.twitter.com/tKQ0FDa5Vl
— nitesh rane (@NiteshNRane) November 16, 2022
அதை சில நொடிகளிலேயே உணர்ந்துகொண்ட ராகுல் காந்தி, உடனடியாக அங்கிருந்த தலைவர்களுக்கு சைகை காட்டினார். உடனடியாக இசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு, தேசியகீதம் ஒலிபரப்பப்பட்டது. இச்சம்பவத்தின் வீடியோவை மராட்டிய பாஜக தலைவர் நிதேஷ் ரானே டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார். இதுக்குறித்து அவர், “பப்புவின் நகைச்சுவை சர்க்கஸ்” என்று பதிவிட்டு இருக்கிறார். இச்சம்பவம் பல்வேறு சமூகஊடக பயனர்களிடம் இருந்து விமர்சனங்களை பெற்றுவருகிறது. எனினும் இந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் தரப்பில் இதுவரையிலும் பதிலளிக்கவில்லை.